அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை: ப. சிதம்பரம் பேட்டி

சென்னை மற்றும் டெல்லியில் நடந்த அமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என ப. சிதம்பரம் பேட்டியில் கூறியுள்ளார். #ITRaid #Newdelhi

Update: 2018-01-13 07:34 GMT

புதுடெல்லி,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் ஏர்செல் மேக்சிஸ் பணமுறைகேடு வழக்கில் இன்று காலை 7.30 மணியளவில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.  இந்த சோதனை முடிவில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அவரது வழக்கறிஞர் அருண் நடராஜன் கூறினார்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள முன்னாள்மத்தியஅமைச்சர்ப.சிதம்பரம் வீட்டிற்கு அமலாக்க துறையினர் சோதனை நடத்துவதற்காக சென்றனர். இதுபற்றி ப. சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. கார்த்தி சிதம்பரம் இங்கே வசிக்கிறார் என நினைத்து, அமலாக்கதுறையினர் என் வீட்டில் சோதனையிட்டனர், பின்னர் மன்னிப்பு கேட்டு திரும்பி சென்றார்கள்.

சென்னை மற்றும் டெல்லியில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் வீட்டில் இருந்த வேறு சில தொடர்பில்லாத ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர் என கூறியுள்ளார்.

#Chidambaram | #ITraid | #Newdelhi

மேலும் செய்திகள்