கூகுள் நிறுவனத்திற்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.135.86 கோடி இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது.

Update: 2018-02-08 17:06 GMT
புதுடெல்லி,

சர்வ தேச அளவில் மிகப் பெரிய சர்ச் என்ஜினாக கூகுள் திகழ்கிறது. இந்த நிலையில்  பிரபல திருமண சேவை இணையதளம்,  வலைதளமான கூகுள் தேடு பொறியியல் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையத்தில் புகார் அளித்து இருந்தது. அதன் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கூகுள் நிறுவனம் பாராபட்சமாக நடந்து கொண்டது உறுதியானதையடுத்து அந்த நிறுவனத்திற்கு ரூ.135.86 கோடி  விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கூகுள் தேடல்களின் நடைமுறைகளில் ஈடுபடுவதைக் கண்டறிந்தது, அவ்வாறு செய்வதன் மூலம், அதன் போட்டியாளர்களுக்கும் பயனர்களுக்கும் பாதிப்பு விளைவிக்க கூடும் என தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த அபராத தொகையினை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்