வங்கி மோசடி வழக்குகளில் ஜனவரி, பிப்ரவரியில் ரூ. 7,109 கோடி சொத்துக்கள் பறிமுதல் - மத்திய அரசு

வங்கி மோசடி வழக்குகளில் இருமாதங்களில் அமலாக்கப்பிரிவு ரூ. 7,109 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்தது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. #BankScam #EnforcementDirectorate

Update: 2018-03-09 12:01 GMT
புதுடெல்லி,

மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்த தகவலில் 2018-ல் முதல் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் வங்கி மோசடிகள் தொடர்பாக அமலாக்கப்பிரிவு 234 சோதனைகளை மேற்கொண்டு உள்ளது, ரூ. 7,100 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மக்களவையில் மத்திய நிதித்துறை இணை மந்திரி ஷிவ் பிரதாப் சுக்லா இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்த பதிலில், 2018 பிப்ரவரி முடிய கடந்த மூன்று ஆண்டுகளில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு 605 வழக்குகளை பதிவு செய்து உள்ளது. ரூ. 27,982 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்து உள்ளது. இதில் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்குகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கிகளில் நடந்த மோசடிகள் தொடர்பாக இவ்வருடம் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் மட்டும் அமலாக்கப்பிரிவு 234 சோதனைகளை மேற்கொண்டு உள்ளது, அப்போது ரூ. 7,109 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்‌ஷி  நாட்டின் 2–வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் வாங்கிய ரூ.12,723 கோடி கடனை திரும்பச் செலுத்தவில்லை, அவர்கள் வெளிநாடு தப்பிவிட்டனர். 
கான்பூரைச் சேர்ந்த ரோட்டோமேக் பேனா தொழிற்சாலையின் அதிபர் விக்ரம் கோத்தாரி, பாங்க் ஆப் பரோடா உள்பட 7 பொதுத்துறை வங்கிகளில் ரூ.3,695 கோடி கடன் வாங்கி அதைச் திருப்பி செலுத்தவில்லை. இந்த வழக்குகள் உள்பட பிற முக்கிய வழக்குகளிலும் அமலாக்கப்பிரிவு விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

மேலும் செய்திகள்