கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்திய வரைபடம் தவறாக இடம் பெற்றிருந்ததாக சர்ச்சை

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்திய வரைபடம் தவறாக இடம் பெற்றிருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. #JustinTrudeau

Update: 2018-03-16 07:26 GMT
புதுடெல்லி,

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் சுமார் ஒருவாரம் காலம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜஸ்டின் ட்ரூடோ, டெல்லியில் பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது, இந்தியாவின் வரைபடம் தவறுதலாக இடம் பெற்றிருந்த விவகாரம் பூதகாரமானது. 

அதாவது, இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், அக்‌ஷய் சின், மற்றும் குஜராத் ஆகிய இடங்கள் தவறுதலாக இடம் பெற்றிருந்தாக கூறப்பட்டது. 

இதையடுத்து, கனடா அரசிடம் இந்த விவகாரத்தை இந்திய அரசு எடுத்துச்சென்றது. இப்பிரச்சினைக்கு விளக்கம் அளித்த கனடா அரசு,  ”இந்தியக்கொடி தவறுதலாக இடம் பெற்று இருந்தாக கூறப்படும் நிகழ்ச்சியானது மூன்றாம் தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 நிகழ்ச்சியை கனடா ஏற்பாடு செய்யவில்லை. இந்திய வரைபடம் தவறுதலாக இடம் பெற்றிருந்ததை கனடா ஏற்றுக்கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளது.  இந்த தகவலை இந்திய வெளியுறவுதுறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்