மகாராஷ்டிராவில் மார்ச் 18-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

மகாராஷ்டிராவில் மார்ச் 18-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. #Maharashtra #Plasticban

Update: 2018-03-16 09:09 GMT
மும்பை,

பிளாஸ்டிக்கின் காரணமாக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உயர்ந்து வருகின்றன. பிளாஸ்டிக் பைகள் காரணமாக நீர் பற்றாக்குறை மற்றும் சுகாதார அபாயங்கள் ஏற்படுகின்றன. விலங்குகள் இந்த பைகளை சாப்பிடுகின்றன மேலும் கடல் உயிரினங்களுக்கும் பிளாஸ்டிக் அபாயகரமானதாக உள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் மராத்திய புத்தாண்டான ’குத்ஹி பத்வா’ மார்ச் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மகாராஷ்டிரா அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதில் பிளாஸ்டிக் பைகள், தெர்மாக்கோல் மற்றும் பிளாஸ்டிக் தகடுகள், பிளாஸ்டிக் கப்கள், கிண்ணங்கள், பிளாஸ்டிக் கரண்டிகள் ஆகியவை தடை செய்யப்பட்ட பொருட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, ஃபிளக்ஸ் போர்டுகள், பாலிப்ரோப்பிலீன் பைகள், பதாகைகள், கொடிகள், அலங்கார கதவுகள், பிளாஸ்டிக் தாள்கள் மற்றும் அனைத்து வகையான பிளாஸ்டிக் ரேப்பர்கள் போன்ற பல்வேறு பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 மைக்ரான் மற்றும் 8x12 அங்குலங்களைக் காட்டிலும் சிறிய அளவிலான பிளாஸ்டிக் பைகளும் தடை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மும்பையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

சுற்றுச்சூழல் மந்திரி ராம்தாஸ் கதாமின் கீழ் ஒரு சக்திமிகுந்த கமிட்டியின் மூலம் பிளாஸ்டிக் பொருட்களின் தடை மீதான விவாதம் நடத்தப்பட்டது. இந்த கமிட்டியானது பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்வதற்கான வழிகாட்டலை உருவாக்கியது. இன்று, பிளாஸ்டிக் மீதான தடையை  முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி முதல் முழுமையாக பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் மந்திரி ராம்தாஸ் கதாம்  தெரிவித்தார்.

மேலும் செய்திகள்