பெண் குழந்தை பிறப்பை வரவேற்கும் சமூகம்; விபசாரத்தில் தள்ளும் அவலம்

இந்தியாவில் பெண் சிசு கொல்லப்படும் அவலம் உள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் பெண் குழந்தை பிறப்பை வரவேற்கும் சமூகம் உள்ளது. ஆனால் அவர்களை விபசாரத்தில் தள்ளும் அவல நிலையும் உள்ளது. #Prostitution

Update: 2018-03-18 08:32 GMT

நீமுச்,

மத்திய பிரதேசத்தில் ரட்லாம், மாண்ட்சார் மற்றும் நீமுச் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் சமூகத்தினர் பெண் குழந்தைகள் பிறப்பை வரவேற்கின்றனர்.  சிறுமிகள் வளர்ந்தவுடன் விபசாரத்தில் தள்ளப்படுகின்றனர்.  அவர்களது வருவாயை வைத்தே ஆண் உறுப்பினர்கள் தங்களது வாழ்க்கையை நடத்துகின்றனர்.

இந்த 3 மாவட்டங்களிலும் கஞ்சா விளைச்சலும் அதிகம் உள்ளது.  பஞ்சடா என்ற இந்த சமூகம் 3 மாவட்டங்களில் உள்ள 75 கிராமங்களில் பரவியுள்ளனர்.  மொத்தம் 23 ஆயிரம் பேர் கொண்ட சமூக மக்கள் எண்ணிக்கையில் 65 சதவீதத்தினர் பெண்கள்.

விபசார தொழிலானது மனித கடத்தலுக்கும் வழிவகுத்து உள்ளது.  வேறு பகுதிகளில் பிறந்த புதிய பெண் குழந்தைகளை இந்த சமூகத்தினர் விலைக்கு வாங்கி, வளர்த்து விபசாரத்தில் தள்ளுகின்றனர்.  பணம் கொடுத்து வாங்கினோம் என்ற அடிப்படையில், சிறுமிகளை அவர்கள் முறையாக கவனிப்பதும் இல்லை.

இதுபற்றி காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறும்பொழுது, சமூக விழிப்புணர்வே விபசாரம் மற்றும் மனித கடத்தலை தடுக்க முடியும்.  இதற்காக அந்த சமூகத்தில் நாங்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர் என்பதனை உறுதி செய்கிறோம்.

அவர்கள் பணிகளையும் பெற்று வருகின்றனர்.  போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், படித்த குழந்தைளுக்காக எங்கள் அதிகாரிகள் வகுப்புகளும் எடுக்கின்றனர் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்