காங்கிரஸ் மாநாட்டில் பா.ஜனதாவை கடுமையாக தாக்கிய ராகுல் காந்தி!

மகாபாரதத்தில் கெளரவர்களை போன்று அதிகாரத்திற்காக பா.ஜனதா வடிவமைக்கப்பட்டு உள்ளது என ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். #CongressPlenarySession #RahulGandhi

Update: 2018-03-18 11:03 GMT

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் மாநாட்டில் பா.ஜனதாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். 

ராகுல் காந்தி பேசுகையில், குருஷேத்ராவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக பெரும் போர் நடைபெற்றது. அப்போது கெளரவர்கள் மிகவும் பலம்வாய்ந்தவர்களாக இருந்தார்கள், ஆணவத்துடன் இருந்தார்கள். அவர்கள் சிறிய ராணுவம் கொண்ட பாண்டவர்களுடன் போரிட்டனர். பாண்டவர்கள் மிகவும் பணிவானவர்கள். அவர்கள் அதிகமாக பேசவில்லை. கெளரவர்கள் போன்று கிடையாது உண்மைக்காக போராடினர். இப்போது பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதிகாரத்திற்காக போராடுவதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

பாண்டவர்களை போன்று காங்கிரஸ் உண்மைக்காக போராட வடிவமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை பா.ஜனதா தலைவராக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் காங்கிரஸில் இதுபோன்ற ஒருநகர்வை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்தியா, ஒருபோதும் எங்களை பா.ஜனதா போன்று நடக்க செய்யாது. நாம் எதுவும் செய்யவில்லை என்றால் தண்டிக்கும். பாரதீய ஜனதா ஒரு அமைப்பின் குரலாகவே இருக்கும், காங்கிரஸ் ஒரு தேசத்தின் குரலாக இருக்கும் என்றார். 

பிரதமர் மோடி முக்கியமான நேரங்களில் அமைதியாகவே இருந்து வருகிறார் எனவும் விமர்சனம் செய்தார் ராகுல் காந்தி. தொடர்ந்து பேசிவருகிறார். 

மேலும் செய்திகள்