பிரதமர் மோடி, அவரை கடவுளின் அவதாரமாகவே பார்க்கிறார் காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி பேச்சு

பிரதமர் மோடி அவரை மனிதராக நினைக்கவில்லை, கடவுளின் அவதாரமாக பார்க்கிறார் என ராகுல் காந்தி கூறிஉள்ளார். #CongressPlenarySession #RahulGandhi

Update: 2018-03-18 11:57 GMT
டெல்லி, 

காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரதீய ஜனதாவையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் கடுமையாக விமர்சனம் செய்தார். 

ராகுல் காந்தி பேசுகையில், நாங்கள் பாரதீய ஜனதாவில் இருந்து மாறுபட்டவர்கள். நாங்கள் தவறை இழைத்து இருந்தால் நாங்கள் அதனை ஏற்றுக் கொள்வோம். பிரதமர் மோடி 1000, 500 ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்ய முடிவு செய்தார். அதுதவறான நடவடிக்கை என்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் அந்த தவறை செய்து இருந்தால் ஏற்றுக் கொண்டு இருப்போம், அதனை சரிசெய்து இருப்போம். காங்கிரஸ் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல விரும்புகிறது. நாங்கள் மனிதர்கள்தான், தவறு செய்து இருப்போம். ஆனால் மோடி தன்னை மனிதராகவே நினைப்பது கிடையாது, அவர் அவரை கடவுளின் அவதாரமாகவே பார்க்கிறார் என விமர்சனம் செய்தார். 

மேலும் செய்திகள்