மார்பகம் குறித்த பேராசிரியரின் விமர்சனம் தர்பூசணி பேரணி நடத்தி மாணவிகள் போராட்டம்

கேரளாவில் மாணவிகள் மார்பகம் குறித்த பேராசிரியரின் விமர்சனம் தொடர்பாக தர்பூசணி பேரணி நடத்தி மாணவிகள் போராட்டம் நடத்தினர். #Watermelonstir

Update: 2018-03-20 08:58 GMT
கோழிக்கோடு

இஸ்லாமிய மாணவிகள் ஆடை அணிவது தொடர்பாக கல்லூரி  உதவி ஆசிரியரின் பேச்சு  சர்ச்சைக்கு ஆளானது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஃபரூக் பயிற்சி கல்லூரி அமைந்துள்ளது. அங்கு பயின்று வருபவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் அந்த கல்லூரி ஆசிரியர் ஜுஹர் முனவர், நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார்.

அதில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப்பை சரியாக அணிவதில்லை.

தர்பூசணி பழத்தை பிளந்தால் எப்படி இருக்குமோ, அவ்வாறு தங்கள் மார்பகங்களை தெரியுமாறு ஆடை அணிகின்றனர் என்று கூறினார்.

இதற்கு கல்லூரி மாணவிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தங்கள் முகத்தைப் பார்த்து பாடம் நடத்தினால் போதும். உடலைப் பார்த்து பாடம் எடுக்க வேண்டாம் என்று கோழிக்கோடு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு கூறியுள்ளது.

கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியின் மாணவர், உதவிப் பேராசிரியரின் கருத்துக்களை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுடன், 'பெண்கள் ஒரு இஸ்லாமிய வழியிலேயே ஆடை அணிகிறார்கள் .

கேரள மாணவர் அமைப்பு தர்பூசணி பழங்களை அனைவருக்கும் வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏபிவிபி தொழிலாளர்கள் கல்லூரி வாசலில் தர்பூசணி பழத்தை உடைத்து போராட்டம் நடத்தினர்.

மேலும் இஸ்லாமிய பெண்கள் லெக்கிங்ஸ் தெரியுமாறு புர்தா அணிவதாகவும் ஆசிரியர் ஜுஹர் முனவர் பேசியுள்ளார். இஸ்லாமிய பெண்கள் முப்தா அணிய வேண்டாம். அதற்கு பதிலாக ஷால்ஸ்கார்ப் மூலம் தலையை மூடிக் கொள்ள வேண்டும்.

ஆண்களைக் கவரும் முக்கிய பாகங்களில் பெண்களின் மார்பகமும் ஒன்று. அதனை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டியுள்ளது என்றும் ஆசிரியர் ஜூஹர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய பரூக் பயிற்சி கல்லூரியின் முதல்வர் சி ஏ ஜவஹர், 3 மாதங்களுக்கு முன், கல்லூரிக்கு வெளியே பேசப்பட்ட நிகழ்வு. இது குறித்து எந்த புகாரும் வரவில்லை எனவே  இதுதொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்