காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் அணைகளின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் - கர்நாடகா பதில்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் அணைகளின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் கர்நாடக அரசு எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்து உள்ளது. #CauveryManagementBoard

Update: 2018-03-22 07:54 GMT
புதுடெல்லி

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு 6 வார காலம் அவகாசம் அளித்து கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.

சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடுவில் 5 வாரங்கள் முடிந்துவிட்டன. ஆனால், மத்திய அரசு இன்னும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம்தாழ்த்தி வருகிறது.

இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் வருகிற 30-ந் தேதிக்குள் அமைக்கப்பட வாய்ப்பு இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எழுத்துபூர்வமான கருத்துகனை தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. ஒரு திட்டத்தை உருவாக்கவேண்டும் என்று தான் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அதை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சரியான தீர்வாக அமையும் திட்டத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என கூறி இருந்தார்.

இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் உத்தரவின்படி கர்நாடக அரசு எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்து உள்ளது. அதில் 

காவிரிமேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது. காவிரி மேற்பார்வை, கண்காணிப்புக்குழு போன்றவற்றை அமைக்க ஆட்சேபம் இல்லை
மேலாண்மை வாரியத்தை அமைத்தால் அணைகளின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும்  தமிழகத்துக்கு 70 டிஎம்சி காவிரி நீர் தர முடியவில்லை என ஒப்புதல் அளித்து உள்ளது.

மேலும் செய்திகள்