அம்பேத்கரின் பிறந்த நாள் விழா : பழங்குடியின பெண்களுக்கு காலணிகள் வழங்கினாா் பிரதமா் மோடி
அண்ணல் அம்பேத்கரின் 127-வது பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியினத்தைச் சோ்ந்த பெண்களுக்கு காலணி ஜோடிகளை வழங்கினார். #PMModi;
பிஜாப்பூர்,
டாக்டர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள பிஜாப்பூர் நகரிலுள்ள பழங்குடியினா் ஒவ்வொருவருக்கும் ஒரு ஜோடி காலணிகளை வழங்கினார்.
மேலும், ஜங்கலாவில் ஆயுஷ்மன் பாரத் திட்டத்தின் கீழ் முதல் சுகாதார மையத்தையும் திறந்துவைத்துள்ளா்ா. பின்னா் பஸ்தார் இணைய திட்டத்தின் மூலம் 40,000 கி.மீ.க்கு ஃபைபர் ஆப்டிக்ஸ் கேபிள் உதவியுடன் ஏழு மாவட்டங்களுக்கு முதல் கட்ட இணைய சேவை திட்டத்தையும் தொடங்கி வைத்தா்ா.
இதைதொடா்ந்து, பயணிகள் எளிதாக பயணிக்கு வகையில் குதும் மற்றும் பானுபிராட்ங்ருக்கு இடையே ஒரு புதிய ரயில் பாதையும் திறந்துவைத்தார் பிரதமர் மோடி.