பெங்களூருவுக்கு தனியார் பேருந்து மூலம் உரிய ஆவணமின்றி கடத்திச் செல்லப்பட்ட ரூ 1,100 கோடி பறிமுதல்

உரிய ஆவணமின்றி ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ 1,100 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2018-04-17 13:21 IST
ஆனந்தப்பூர்

பெங்களூருக்கு தகுந்த ஆவணமின்றி தனியார் பஸ் மூலம் கொண்டு சென்ற ரூ 1,100 கோடி பறிமுதல். கர்நாடக சட்ட சபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே)12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க் கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது 

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர்   மாவட்டத்தில், வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அந்த பஸ்சில் சோதனை நடத்தினர். அப்போது பஸ்சில்  தகுந்த ஆவணம் இன்றி ரூ.1,100 கோடி  இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த பணம் பெங்களூருக்கு கொண்டு செல்லப்படுவதாக  தெரியவந்து உள்ளது.

அந்த பணத்தை போலீசார் கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பணம்  கர்நாடக சட்டசபை தேர்தலில்  பயன்படுத்த கொண்டு செல்லப்பட்டதா அல்லது இது  யார் பணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்