ஊடுருவல்காரர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம் ; அசாமில் அமித்ஷா பேச்சு

அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.;

Update:2025-12-29 20:11 IST

கவுகாத்தி,

அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா செயல்பட்டு வருகிறார்.

அசாமிற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். நிகழ்ச்சியில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திடப்பணிகளை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அமித்ஷா கூறுகையில், வங்காளதேசத்தை சேர்ந்த சட்ட விரோத ஊடுருவல்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பல நூறு ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பாஜகவுக்கு வாக்களித்து அடுத்த 5 ஆண்டுகளை கொடுங்கள். அசாமில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவில் இருந்தும் ஊடுருவல்கார்களை நாங்கள் வெளியேற்றுவோம். ஊடுருவல்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து நிலங்களையும் மீட்போம் ‘ என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்