பிரதமர் மோடி இந்து கடவுள் ராமரின் மற்றொரு அவதாரம்! பா.ஜனதா எம்.எல்.ஏ. சொல்கிறார்

பிரதமர் மோடி இந்து கடவுள் ராமரின் மற்றொரு அவதாரம் என பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் கூறி உள்ளார். #PMModi

Update: 2018-05-11 12:00 GMT
பாலியா,

உத்தரபிரதேச மாநிலம் பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் பேசுகையில், பிரதமர் மோடி இந்து கடவுள் ராமரின் அவராதம், ராம ராஜியத்தை அமைக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற அவருக்காக அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத்தை அனுப்பி உள்ளார் என கூறிஉள்ளார்.

பா.ஜனதா தலைவர் அமித் ஷாவை ராமரின் தம்பி லட்சுமணன் என்றும் யோகி ஆதித்யநாத்தை அனுமான் என்றும் குறிப்பிட்டு உள்ளார். விரைவில் இந்தியா முழுவதும் ராம ராஜியத்தை அமைக்க மோடிக்கு அமித்ஷாவும், யோகி ஆதித்யநாத்தும் உதவுவார்கள் என்றும் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறி உள்ளார். 

 பா.ஜனதாவின் எம்.எல்.ஏ. சுரேந்திரசிங் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை பதிவு செய்வது இது ஒன்றும் புதியது கிடையாது.

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என அவர் கூறியது சர்ச்சையாகியது. பொறுப்பற்ற வகையில் பேசக்கூடாது என பிரதமர் மோடி எச்சரிக்கையை விடுத்த நிலையிலும் பா.ஜனதாவினர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்கள். 

பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்புக்கு பெற்றோர்கள்தான் காரணம் என்றும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்