கர்நாடக தேர்தலில் முக்கிய பங்காற்றிய வாட்ஸ்-அப் குழுக்கள்- நியூயார்க் டைம்ஸ்

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் WhatsAppப்பின் பங்கு கணிசமான அளவில் இருக்கும் என அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. #KarnatakaElections2018

Update: 2018-05-15 11:17 GMT
கர்நாடக  தேர்தல்  பிரசாரத்தில், WhatsApp குழுக்களின் பங்கு கணிசமான அளவில் உள்ளது. இந்தியாவில் சுமார் 20 கோடி WhatsApp வாடிக்கையாளர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. பிஜேபி, காங்கிரஸ் உட்பட முன்னணி கட்சிகளை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் குழுக்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

தொலைக்காட்சி, பத்திரிகை போன்றவற்றினால் புறக்கணிக்கப்படும்போது, தங்களது கருத்துகளை வெளியிட WhatsApp உதவிகரமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர் அரசியல் கட்சிகளை சேர்ந்த சில நிர்வாகிகள். குறிப்பாக, அடிமட்ட அளவில் செயல்படுபவர்களிடம் இத்தகைய எண்ணம் உள்ளது. கர்நாடக தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ், பிஜேபி என இரு பெரிய கட்சிகளுமே WhatsApp குழுக்களை பெருமளவில் நம்பின.

அம்மாநிலத்தின் கடற்கரையோர தொகுதிகளில் வெற்றிபெற, WhatsApp குழுக்களையே பிஜேபியும் காங்கிரஸும் நம்பியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது நியூயார்க் டைம்ஸ்.  இன்று தேர்தல் முடிவுகளில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், இந்த வெற்றியில் WhatsApp குழுக்களின் பங்கு கணிசமான அளவில் இருந்தது என உறுதியான கருத்துகளை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்