ஆந்திராவில் மீண்டும் படகு விபத்து பெண்கள், குழந்தைகள் உள்பட 33 பேரின் கதி என்ன?

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா படகு தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. எனினும் அதில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Update: 2018-05-15 22:00 GMT

நகரி,

கோதாவரி ஆற்றில் தேவிபட்டினத்தில் இருந்து மாடப்பள்ளி செல்லும் ஒரு படகில் போலாவரம் பகுதியை சேர்ந்த ஆதிவாசிகள் 40 பேர் நேற்று மாலை பயணம் செய்தனர். அப்போது சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்தது. இதனால் அந்த படகு தள்ளாடியது.

ஏற்கனவே தீ விபத்து நடந்த பகுதியில் அந்த படகு திடீரென கவிழ்ந்தது. அப்போது படகில் இருந்த 7 ஆண்கள் மட்டும் கரைக்கு நீந்தி வந்தனர். படகில் இருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 33 பேரின் நிலை என்ன ஆனது? என்று தெரியவில்லை.

இது பற்றி தகவல் அறிந்த ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு உடனடியாக மீட்பு பணி நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து 22 படகுகளில் மீட்பு படையினர் சென்று மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பலத்த காற்று, மழையால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்