யூனியன் பிரதேசங்களில் நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்க ராஜ்நாத் சிங் உத்தரவு

யூனியன் பிரதேசங்களில் நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்டங்களை விரைந்து முடிக்க ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். RajnathSingh

Update: 2018-05-16 05:24 GMT
புதுடெல்லி,

டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் யூனியன் பிரதேசங்களில்  நிலுவையில் உள்ள பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

அப்போது அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், சண்டிகர், தத்ரா மற்றும் நகர் ஹவேலி, டமன் மற்றும் தியூ, டெல்லி மற்றும் புதுச்சேரி  பல்வேறு யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களின் நிலை பற்றி ராஜ்நாத் சிங்கிடம் அதிகாரிகள் விளக்கினார்.

அதனை தொடர்ந்து யூனியன் பிரதேசங்களில் நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்றும்,  ஒவ்வொரு யூனியன் பிரதேசத்தின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் கருத்தில் கொண்டு நிலுவையில் இருக்கும் திட்டங்களை நிறைவு செய்வதற்கு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.

உள்துறை மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்கரர் அஹிர், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கியூபா மற்றும் உள்துறை அமைச்சின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்