13 வயது சிறுவனை காதல் திருமணம் செய்த 23 வயது பெண் கலெக்டர் அதிரடி உத்தரவு

13 வயது சிறுவனை காதல் திருமணம் செய்த 23 வயது பெண் இருவரும் அவரவர் வீட்டில் தனிதனியே வாழ வேண்டும் என கலெக்டர் அதிரடி உத்தரவு பிறபித்து உள்ளார்.

Update: 2018-05-16 11:30 GMT
திருமலை, 

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கவுதாலம் அருகே உள்ள உப்பரஹால் கிராமத்தை சேர்ந்தவன் 13 வயது சிறுவன். கர்நாடக மாநிலம் சனிக்கனூரை சேர்ந்த அய்யம்மாள்(23) என்பவர் சிறுவனின் உறவினர் ஆவார். இதனால் இருவரும் ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் அடிக்கடி சென்று வந்து உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வயது வித்தியாசம் இல்லாமல் காதல் மலர்ந்தது.

மைனரான சிறுவனுக்கும், மேஜர் பெண்ணுக்கும் ஏற்பட்ட இந்த காதல் உறவு பெற்றோர்களுக்கு தெரியவந்தது. பெற்றோர்கள் இந்த விநோத காதலுக்கு பச்சைக்கொடி காட்டி சிறுவனுக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி உப்பரஹால் கிராமத்தில் திருமணத்தை நடத்தினார்கள்.

இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இதை அறிந்ததும் மணமக்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போது போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டனர்.

இந்த சம்பவத்தை குழந்தை திருமணம், அந்த சிறுவனுக்கு எதிராக நடந்திருக்கும் வன்முறை, என எண்ணி விசாரிக்க சென்றவர்களுக்கு. இது காதல் திருமணம் என்ற அதிர்ச்சி செய்தி தான் கிடைத்தது. இணையத்திலும் இந்த முரணான திருமணம் குறித்த செய்தியும், புகைப்படமும் வெளியாகி கடும் விமர்சனங்களுக்கு ஆளானது.

இதனைத்தொடர்ந்து இந்த திருமணம் செல்லாது எனவும், சட்டத்திற்கு புறம்பானது எனவும், அதிகாரிகள் தரப்பில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கர்னூல் மாவட்ட ஆட்சியர் சத்தியநாராயணன் முன்பு அந்த சிறுவனும், பெண்ணும் நேற்று ஆஜரானார்கள்.

அப்போது அவர்களிடமும் அவர்களின் குடும்பத்தாருடனும் பேசிய ஆட்சியர். சட்டப்படி இந்த திருமணம் செல்லாது. சிறுவனுக்கு 21 வயது ஆன பிறகு அவர்கள் சேர்ந்து வாழ்வதை பற்றி அவர்களே முடிவுசெய்துகொள்ளட்டும். அதுவரை இருவரும் அவரவர் வீட்டில் தனிதனியே வாழ வேண்டும். என கூறி அனுப்பியிருக்கிறார்.

மேலும் செய்திகள்