அரசியலமைப்புபடி நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்து உள்ளார் - காங்கிரஸ்

அரசியலமைப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்து உள்ளார் என காங்கிரஸ் கூறிஉள்ளது. #Congress #Karnataka

Update: 2018-05-16 13:34 GMT
பெங்களூரு,

சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. 

தொங்கு சட்டசபை அமைந்து உள்ள கர்நாடகாவில் முதலிடம் பிடித்த பா.ஜனதாவும், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியும் ஆட்சி அமைக்க போராடி வருவதால் அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது. இருதரப்பும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்து உள்ளது. இவ்விவகாரத்தில் ஆளுநர்தான் இறுதிமுடிவு எடுக்கவேண்டும். இந்நிலையில் அரசியலமைப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்து உள்ளார் என காங்கிரஸ் கூறிஉள்ளது. காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் இன்று மாலை ஆளுநரை சந்தித்து பேசினார்கள். 

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், அரசியலமைப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்து உள்ளார். அவரின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, அநீதி இழைக்கமாட்டார் என நம்புகிறோம். எங்களுக்கு ஆட்சி அமைக்க பலம் உள்ளது, எங்களைவிட்டு ஒரு உறுப்பினர்கள் கூட வெளியேறவில்லை. நாங்கள் அதனை நடக்கவும் விட மாட்டோம் என கூறிஉள்ளார். 

மேலும் செய்திகள்