சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) மனு

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ஆங்கிலோ இந்திய உறுப்பினரை நியமிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்)கட்சிகள் மனு தாக்கல் செய்தன.

Update: 2018-05-17 22:45 GMT

புதுடெல்லி,

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இணைந்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்தன. அதில், பா.ஜனதா கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை கவர்னர் வஜூபாய் வாலா கர்நாடக சட்டமன்றத்துக்கு ஆங்கிலோ இந்திய நியமன எம்.எல்.ஏ.வை நியமிக்கக்கூடாது. இது சட்டமன்றத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக எடுக்கப்படும் சட்டவிரோத முயற்சி. இது நியாயமற்றதும், ஜனநாயக நடைமுறையை கேலிக்கூத்தாக்குவதும் ஆகும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த கட்சிகள் ஏற்கனவே எடியூரப்பா முதல்–மந்திரி பதவி ஏற்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. முன்னதாக காலையில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு எடியூரப்பா பதவி ஏற்க தடை விதிக்க மறுத்து விட்டது.

மேலும் செய்திகள்