யோகா குரு பாபா ராம்தேவை சந்தித்து 2019 தேர்தலுக்கு ஆதரவு கோரினார் அமித்ஷா

யோகா குரு பாபா ராம்தேவை சந்தித்து பேசிய பா.ஜனதா தலைவர் அமித்ஷா, 2019 தேர்தலுக்கு ஆதரவை கோரி உள்ளார். #AmitShah #BabaRamdev

Update: 2018-06-04 10:49 GMT

புதுடெல்லி,


பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, கடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு ஆதரவு கொடுத்த 50 பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். அதன்படி யோகா குரு பாபா ராம்தேவை சந்தித்து பேசினார். அப்போது  2019 தேர்தலுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கையை விடுத்து உள்ளார். 

அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், “யோகா குரு ராம்தேவ் ஆதரவை பெறுவதற்கு இங்கு வந்தேன். நான் அவரிடம் பேசியதை மிகவும் அமைதியாக கேட்டார், எங்களுடைய பணி தொடர்பாகவும் அவரிடம் விவரித்தேன். நாங்கள் பாபா ராம்தேவின் ஆதரவை பெற்றால் அவரை பின் தொடரும் கோடிக்கணக்கான ஆதரவாளர்களை அடைய முடியும். 2014 தேர்தலின் போது எங்களுடன் நின்றவர்களை சந்தித்து அவர்களுடைய ஆசிர்வாதத்தை கேட்கிறோம். நாங்கள் ஒரு லட்சம் மக்களை சந்தித்து பேச உள்ளோம், ஒரு கோடி குடும்பத்தாரையாவது அடைவோம்,” என கூறிஉள்ளார். யோகா குரு பாபா ராம்தேவ் பிரதமர் மோடியின் 4 ஆண்டுகால ஆட்சியை பாராட்டி வருகிறார்.

மேலும் செய்திகள்