மொபைல் போனை வைத்து விளையாடிய சிறுவன் பேட்டரி வெடித்து காயம்

மத்திய பிரதேசத்தில் மொபைல் போனின் பேட்டரி ஒன்று வெடித்ததில் 10 வயது சிறுவன் காயமடைந்து உள்ளான்.

Update: 2018-06-10 08:47 GMT

செஹோர்,

மொபைல் போன் போன்ற சாதனங்களால் மனிதர்கள் இடையேயான இடைவெளி குறைந்துள்ளது.  தகவல் தொடர்பு மட்டுமின்றி பொழுது போக்கிற்காகவும் பயன்படும் மொபைல் போன்கள் சில சமயங்களில் ஆபத்தினையும் வரவழைத்து விடுகிறது.

மத்திய பிரதேசத்தில் செஹூர் பகுதியில் திலீப் என்ற 10 வயது சிறுவன் தனது தாத்தாவின் மொபைல் போனை வைத்து விளையாடி கொண்டு இருந்துள்ளான்.  அதில் இருந்த பேட்டரியை வெளியே எடுக்க முயற்சித்தபொழுது அது வெடித்து உள்ளது.

இந்த சம்பவத்தில் சிறுவனின் நெஞ்சு மற்றும் கை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளது.  உடனடியாக அவனை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஹாமிதியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்