குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பள்ளிகளில் செக்ஸ் கல்வி அவசியம்: தன்னார்வலர்கள் கருத்து

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பள்ளிகளில் செக்ஸ் கல்வி அவசியம் என தன்னார்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2018-06-10 23:00 GMT
புதுடெல்லி, 

நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க பள்ளிகளிலேயே செக்ஸ் கல்வியை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. குழந்தைகள் உரிமை ஆர்வலரான பூஜா மார்வா கூறும்போது, “பாலியல் தொடர்பான அறிவு நிச்சயம் குழந்தைகளை குற்றங்களில் இருந்து காப்பாற்ற உதவும். குற்றத்தை அடையாளம் காண உதவுவதுடன், இதுகுறித்து புகார் செய்ய வேண்டும் என்ற எண்ணமும், இது தங்கள் தவறல்ல என்ற எண்ணமும் அவர்களிடம் ஏற்படும்” என்றார்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் மனநல பேராசிரியர் நந்தகுமார் கூறும்போது, “குறிப்பிட்ட விதிமுறைகளுடன் செக்ஸ் கல்வி போதிக்கப்படுவது அத்தியாவசியமானது. இது சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும். 10 வயது முதல் சிறுமிகளுக்கு செக்ஸ் கல்வி வழங்க வேண்டும். அது தான் அவர்கள் வளர்கிற வயது. அதேசமயம் பெற்றோர்களும் குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வளருவதற்கு ஏற்ப அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்