கேரளாவில் கனமழைக்கு 16 பேர் பலி; சட்டசபையில் மந்திரி தகவல்

கேரளாவில் கடும் காற்றுடன் கூடிய பலத்த மழையால் கடந்த 2 நாட்களில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

Update: 2018-06-11 09:30 GMT

திருவனந்தபுரம்,

கேரள சட்டசபையில் இன்று பேசிய வருவாய் துறை மந்திரி சந்திரசேகரன், கடந்த மே 29ந்தேதி பருவமழை தொடங்கியது.  இந்த நிலையில், கடந்த 2 நாட்களில் மழைக்கு 16 பேர் பலியாகியுள்ளனர் என கூறியுள்ளார்.

இந்த மழையால் 1,109 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.  61 வீடுகள் முழுவதும் இடிந்து போயுள்ளன.  33 குடும்பங்களை சேர்ந்த 122 பேர் நிவாரண முகாம்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என முதற்கட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

188.41 ஹெக்டேர் விவசாய நிலங்களில் ஏற்பட்ட வேளாண் சேதமதிப்பு ரூ.6.34 கோடி என தெரிய வந்துள்ளது.  இந்த கனமழையால் ஏற்பட்ட பேரிடரில் 2,784 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கனமழைக்கு பலியானோரின் குடும்பத்தினருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம் நிதி வழங்கப்படும்.  வீடுகள் சேதமடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்