மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு சிறை; இந்தியா கடும் அதிருப்தி

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மாலத்தீவில் கடந்த சில மாதங்களாக அரசியல் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

Update: 2018-06-14 22:03 GMT

புதுடெல்லி,

 நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்தியதாக முன்னாள் அதிபர் மம்னூன் அப்துல் கயூம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சயீத் ஆகியோருக்கு 19 மாத சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் அந்நாட்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த விவகாரம் மாலத்தீவு அரசியலில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீனின் திட்டப்படியே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டு உள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாலத்தீவு முன்னாள் அதிபர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு, உரிய விசாரணை எதுவுமின்றி நீண்டகால சிறைத்தண்டனை விதித்து இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இது மாலத்தீவு அரசின் சட்டத்தின் ஆட்சி மீதும், வருகிற அதிபர் தேர்தல் மீதான நம்பகத்தன்மை மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்று கூறப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு, நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசியல்சாசன நிறுவனங்களின் சுதந்திரமான செயல்பாட்டை அரசு அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ள வெளியுறவு அமைச்சகம், அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்