டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு சோனியா காந்தியை கமல்ஹாசன் சந்திக்க உள்ளதாக தகவல்

டெல்லியில் நாளை காலை 11 மனிக்கு சோனியா காந்தியை கமல்ஹாசன் சந்தித்து பேச உள்ளார். #SoniaGandhi

Update: 2018-06-20 15:45 GMT
புதுடெல்லி,

நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இது தொடர்பான நேரடி விசாரணைக்கு கமல்ஹாசன் அழைக்கப்பட்டு இருந்தார். 

அதன்பேரில் இன்று டெல்லி சென்ற கமல்ஹாசன் தலைமை தேர்தல் கமி‌ஷனில் ஆஜராகி கட்சி தொடர்பான விளக்கங்களை அளித்தார். பின்னர் மாலையில் அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். இந்த சந்திப்பின்போது பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார்.

இந்த நிலையில், சோனியா காந்தியை நாளை காலை 11 மணிக்கு கமல்ஹாசன் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்