கல் நீக்கும் ஆப்ரேஷனின் போது நோயாளியின் சிறுநீரகத்தை திருடிய மருத்துவர்! தனியார் மருத்துவமனைக்கு சீல்

தனியார் மருத்துவமனையில் ஆப்ரேஷனின் போது நோயாளியின் சிறுநீரகத்தை மருத்துவர் திருடிய சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

Update: 2018-06-24 09:15 GMT
லக்னோ,

உத்தரபிரதேசம் மாநிலம் முசாப்பர்நகரில் நியூ மாண்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 60 வயதாகும் இக்பால் என்பவர் சிறுநீரகத்தில் கல் அடைப்பு காரணமாக சிகிச்சைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள். சனிக்கிழமை அன்று கல் நீக்கும் அறுவை சிகிச்சைக்காக இக்பால் சென்றுள்ளார். அப்போது மருத்துவர் விபு கார்க் அவருடைய சிறுநீரகத்தை திருடியுள்ளார். இதுதொடர்பாக போலீசிடம் இக்பாலின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளார்கள். மருத்துவர் திருடிய சிறுநீரகத்தை அப்பகுதியில் பத்திரமாக வைக்கப்பட்டு இருந்ததை பார்த்ததாக அவருடைய உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். 

இதனையடுத்து உத்தரபிரதேச மாநில சுகாதாரத்துறை தலைமை மருத்துவ அதிகாரி தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்தார், இதுதொடர்பாக விசாரணையை முன்னெடுக்க தனி குழுவையும் அமைத்தார். இதுதொடர்பாக போலீஸ் ஏற்கனவே விசாரணையை தொடங்கி விட்டது. மருத்துவர் விபு கார்க் மற்றும் மருத்துவமனையின் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்