அக். 2 முதல் ஒடிசாவில் சில இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை

அக்டோபர் 2 ஆம் தேதி முதல் ஒடிசாவில் சில இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #PlasticBan

Update: 2018-07-10 10:25 GMT
புவனேஷ்வரர், 

பிளாஸ்டிக் பயன்பாட்டை இரண்டு ஆண்டுகளில் ஒழிக்க ஒடிசா மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு முயற்சியாக, ஒடிசாவின் பல்வேறு இடங்களில், மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் தேதி முதல், பிளாஸ்டிக் பயன்படுத்த முழு தடை விதிக்கப்படுவதாக முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். 

நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ கான்பரன்சிங் முலம் பேசிய நவீன் பட்நாயக் இந்த தகவலை வெளியிட்டார். நகராட்சி பகுதிகளிலும் புரி டவுன் பகுதிகளிலும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக நவீன் பட்நாயக் தெரிவித்தார். புவனேஷ்வர், கட்டாக், பெர்ஹாம்பூர், சமால்பூர், ரவூர்கெலா ஆகிய பெரு நகரங்களில் முதல் கட்டமாக பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்படுவதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் தடை செய்யப்படும் என்று நவீன் பட்நாயக் தெரிவித்தார். 

வீடு & நகர வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயாத் ராஜ் அமைப்புகள், ஊரக அமைப்புகள், இந்த உத்தரவை பின்பற்றுவது கட்டாயம் என்றும் வனம் மற்றும் சுற்றுசூழல் துறை, பிளாஸ்டிக் பயன்பாடு கட்டுப்பாட்டை கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்