டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு அரசியல், சினிமா மற்றும் சமுதாயம் தொடர்பாக இருவரும் விவாதித்ததாக ராகுல் காந்தி தகவல். #Ranjith #RahulGandhi

Update: 2018-07-11 05:33 GMT
புதுடெல்லி

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை சந்தித்து பேசி உள்ளார். இது குறித்து அவர தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

மெட்ராஸ், கபாலி, காலா போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித்தை நேற்று டெல்லியில் சந்தித்தேன். அவருடன் நடிகர் கலையரசனையும் சந்தித்தேன். அரசியல், சினிமா மற்றும் சமுதாயம் தொடர்பாக இருவருடன் விவாதித்தேன். அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சியளிக்கிறது என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்