பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த துறையும் இல்லை பிரதமர் மோடி

அனைத்துத் துறைகளிலும் அடிமட்ட அளவில் பெண்களின் பங்களிப்பு உள்ளது என பிரதமர் மோடி கூறினார். #PMModi

Update: 2018-07-12 05:51 GMT
புதுடெல்லி

நரேந்திர மோடி (NaMo) வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுப்  பெண்களுடன் மோடி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது;-

இன்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், பெண்கள் பெருமளவில் பணிபுரிகின்றனர் என்றும், பெண்களின் பங்களிப்பு இல்லாமல், வேளாண்மை மற்றும் பால் உற்பத்தித் துறைகளை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார். சத்தீஸ்கரில் 22 மாவட்டங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் 200 வகையான பொருட்களை விற்க 122 அங்காடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது

இளைய தலைமுறையினர் மத்தியில் திறன் மேம்பாட்டை வளர்ப்பதில் அரசு கவனம் செலுத்துவதாகவும், இளைய தலைமுறையினர் தங்கள் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வகையில் சொந்தக் காலில் நிற்பதற்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் மோடி கூறினார்.

காலை 9.30 மணிக்கு தொடங்கி ஒரு கோடி பெண்களுடன் உரையாட உள்ளதாக தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் நேற்று பதிவிட்டிருந்தார்.  

மேலும் செய்திகள்