நடுவானில் இரு இண்டிகோ விமானங்கள் மோதவிருந்தது தவிர்ப்பு

கோவையிலிருந்து ஐதராபாத் நோக்கி சென்ற விமானமும், பெங்களூருவிலிருந்து கொச்சி சென்ற விமானமும் நேருக்கு நேர் மோதவிருந்தது தவிர்க்கப்பட்டுள்ளது.

Update: 2018-07-12 12:47 GMT
பெங்களூரு,

330 பயணிகள் வரையில் பயணம் செய்த இண்டிகோ விமானங்கள் மோதவிருந்தது ‘ஆட்டோமெட்டிக்’ எச்சரிக்கையின் மூலம் தவிர்க்கப்பட்டுள்ளது, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இரு விமானங்களும் 8 கிலோ மீட்டர் தொலைவில் பயணித்தபோது, விமானம் அருகில் எதிர்பட்டால் எச்சரிக்ககூடிய TCAS அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து கட்டுப்பாட்டு அறையின் உத்தரவை ஏற்று கொண்ட விமானிகள் விமானத்தை மாற்றி இயக்கியுள்ளனர். விமானிகள் ஒரு விமானத்தை 200 அடிக்கு கீழும், மற்றொரு விமானத்தை மேல் நோக்கியும் இயக்கியுள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.  ஐதராபாத்தை நோக்கிய விமானத்தில் 162 பயணிகளும், மற்றொரு விமானத்தில் 166 பயணிகளும் இருந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விமான விபத்து விசாரணை அமைப்பு (ஏஏஐபி) விசாரணையை மேற்கொள்கிறது.

கடந்த மே மாதம் 21-ம் தேதி சென்னை வான்வழியில் இதேபோன்று இண்டிகோவின் விசாகப்பட்டணம் - பெங்களூரு விமானம், இந்திய விமானப்படை விமானத்துடன் மோதவிருந்தது, அப்போதும் ‘ஆட்டோமெட்டிக்’ எச்சரிக்கையின் மூலம் தவிர்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்