நாடாளுமன்ற மேலவை துணை தலைவர் தேர்தல் ஆகஸ்டு 9ந்தேதி நடைபெறும்; வெங்கையா நாயுடு

நாடாளுமன்ற மேலவை துணை தலைவர் தேர்தல் ஆகஸ்டு 9ந்தேதி நடைபெறும் என அவை தலைவர் வெங்கையா நாயுடு இன்று தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-06 06:59 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மேலவை துணை தலைவராக பதவி வகித்தவர் ஜோசப் குரியன்.  கேரளாவை சேர்ந்தவரான குரியன் காங்கிரஸ் கட்சியில் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காலத்தில் மத்திய மந்திரியாக பதவி வகித்தவர்.

கடந்த 1980ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை 6 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.  அதன்பின்னர் கடந்த 2005ம் ஆண்டில் நாடாளுமன்ற மேலவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த நிலையில் மேலவை துணை தலைவராக இருந்த இவரது பதவி காலம் கடந்த ஜூலை 1ந்தேதியுடன் நிறைவு பெற்றது.

இதனை அடுத்து காலியாக உள்ள நாடாளுமன்ற மேலவை துணை தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்டு 9ந்தேதி நடைபெறும் என அவை தலைவர் வெங்கையா நாயுடு இன்று தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஆகஸ்டு 8ந்தேதி நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்