முசாபர்பூர் காப்பக பாலியல் வன்முறை விவகாரம் அரசியல்மயமாக்கப்படக் கூடாது -முதல்வர் நிதிஷ் குமார்

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் முசாபர்பூர் காப்பக பாலியல் வன்முறை விவகாரம் அரசியல்மயமாக்கப்படக் கூடாது என்று கூறியுள்ளார்.

Update: 2018-08-06 09:39 GMT
பாட்னா

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

காப்பக பாலியல் வன்முறை  குறித்த அறிக்கை கிடைத்தவுடனேயே சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து உள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு  கவலைப்படவில்லை, இந்த பிரச்சினை அரசியல்மயமாக்கப்படுகிறது. சம்பவத்தைப் பற்றி அறிந்த அனைவரையும் நான் கேள்வி கேட்க விரும்புகிறேன், ஏன் அவர்கள் முன்னர் அதை எழுப்பவில்லை? 

TISS இந்த அறிக்கையை தயாரிக்கவில்லையென்றால், அந்த சம்பவம் கவனிக்கப்படாமல் போய் இருக்கும். அறிக்கை வெளியிட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தப் பிரச்சினை அரசியல்மயமாக்கப்பட்டது. 

வெகுஜன பாலியல் பலாத்காரத்தை  மறைப்பதாக கூறிய குற்றச்சாட்டை முதல்வர் நிதீஷ் குமார் மறுத்துள்ளார்.

பீகாரில் உள்ள அனைத்து காப்பகங்களிலும் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு உள்ளதா என சோதனையிட முதல்வர் நிதிஷ்குமார்  உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்