2019 தேர்தல்: சோனியா காந்தியின் தொகுதியில் பிரியங்கா போட்டியிடுகிறார்?

2019 பாராளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது. #PriyankaGandhi

Update: 2018-08-06 12:41 GMT

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையானது அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அவ்வப்போது எழுந்து வருகிறது.

 பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய சுவரொட்டிகள் உத்தரபிரதேசத்தில் அடிக்கடி ஒட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறாரா? என்பது தொடர்பாக எந்தஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்டகாலமாக அரசியல் பிரவேசத்தை மறுக்கும் பிரியங்கா, இப்போது கட்சி பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். 2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றியடை செய்ய வேண்டும் என்ற ஸ்திர நோக்கத்துடன் மக்கள் மத்தியில் களஆய்வு செய்து திட்டங்களை வகுக்கும் 100 செயல்திட்டம் ஒன்று அவர் தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது என தகவல் வெளியாகியது.

இந்நிலையில் 2019 பாராளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது. 

இதற்கிடையே உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் இந்திராவின் ரத்தம் பிரியங்கா விரைவில் வருகிறார் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதில் இந்திரா காந்தி மற்றும் அவரது பேத்தியான பிரியங்காவின் படங்கள் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸை சேர்ந்த ஹசீப் அகமது பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்தச் சுவரொட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் செய்திகள்