ஆகஸ்ட் 3-வது வாரத்தில் அருண் ஜெட்லி தனது பணிகளை துவங்குவார் என தகவல்

ஆகஸ்ட் 3-வது வாரத்தில் அருண் ஜெட்லி நிதி அமைச்சராக தனது பணிகளை துவங்குவார் என தகவல்கள் கூறுகின்றன. #ArunJaitley

Update: 2018-08-07 11:30 GMT
புதுடெல்லி,

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கடந்த மே 14 ஆம் தேதி நடைபெற்றது. தற்போது, அருண் ஜெட்லி தனது இல்லத்தில் தங்கியிருந்து ஓய்வு பெற்று வருகிறார். அருண் ஜெட்லி வகித்து வந்த  நிதித்துறை கூடுதல் பொறுப்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 

ஓய்வில் இருந்த போது, அருண்  ஜெட்லி, அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்தும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை அருண்ஜெட்லி பதிவிட்டு வருகிறார். அதேபோல், வங்கிகள் கூட்டமைப்பு தொடர்பான நிகழ்ச்சி, ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு தினம் ஆகிய நிகழ்ச்சிகளின் போது வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அருண் ஜெட்லி கலந்து கொண்டார்.

இந்த நிலையில், நடப்பு மாத இறுதியில் அருண்ஜெட்லி தனது அமைச்சக பணிகளை கவனிக்க துவங்குவார் என்று தகவல்கள் கூறுகின்றன. தற்போது, நன்கு உடல் நலம் தேறியுள்ள அருண் ஜெட்லி நிதி அமைச்சக பொறுப்பை விரைவில் ஏற்றுக்கொள்வார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்