தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு: பீகாரில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் - நிதிஷ் குமார்

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுயொட்டி பீகாரில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் கூறியுள்ளார். #RIPKarunanidhi

Update: 2018-08-08 04:50 GMT
பாட்னா,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். 

இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். 

இந்தநிலையில்,  திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி பீகாரில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் முதுபெரும் தலைவரை இழந்து வாடும் தமிழக மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்