ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த இருவர் கைது

ஐதராபாத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. #NIA #Hyderabad

Update: 2018-08-12 09:34 GMT
ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தேசிய புலனாய்வு முகமை, ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக இருவரை கைது செய்துள்ளது. விசாரணையில் அவர்கள் முகமது அப்துல்லா பஷித் மற்றும் முகமது அப்துல் காதர் என பெயர் விவரம் தெரிய வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் விமான நிலையத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களோடு இணைந்து கைதான இருவரும் தீவிரவாத பயிற்சியை மேற்கொண்டனர் என தேசிய புலனாய்வு முகமை கூறியுள்ளது. 

இந்நிலையில் கடந்த 6-ந் தேதி ஐதராபாத்தின் ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. இச்சோதனையில் பயங்கரவாத ஆயுதங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஷேக் அஷார் உல் இஸ்லாம், முகமது ஃபர்ஹான் ஷாயிக் மற்றும் அட்னன் ஹாசன் ஆகியோர் இந்தியாவிலுள்ள இஸ்லாமிய இளைஞர்களுக்கு தடைசெய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் சார்பில் தீவிரவாத பயிற்சி வழங்கியதாக தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்