கேரளாவிற்கு 26 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிய தொழில் அதிபர்

வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவிற்கு உலகம் முழுவதும் இயங்கி வரும் நிறுவனம் லுலு 26 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Update: 2018-08-16 11:42 GMT
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கியது. இதனால் ஒரே நேரத்தில் 35அணைகள் திறந்து விடப்பட்டன. இதன் காரணமாக பெரும் அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் நிலச்சரிவினால் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.இதுவரை 67 பேர் உயிர் இறந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 8,316 கோடி ரூபாய் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மத்திய அரசு 100 கோடி நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்தது. அதுமட்டுமின்றி பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவியை அளித்து வருகின்றனர்.இந்நிலையில் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு, உலகம் முழுவதும் இயங்கி வரும் நிறுவனமான லுலுவின் நிறுவன தலைவர் யூசுப் அலி, கேரளாவிற்கு நிவாரண நிதியாக 26 கோடி ரூபாயை நிவாரணமாக வழங்கி உள்ளது அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. மேலும் யூசுப்அலி கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமா நடிகர்கள் செய்துள்ள நிவாரண நிதி உதவி விவரம்

சிவகார்த்திகேயன்- ரூ. 10 லட்சம்
விஜய் தேவரகொண்டா- ரூ. 5 லட்சம்
அல்லு அர்ஜுன்- ரூ. 25 லட்சம்
மம்முட்டி, துல்கர் சல்மான்- ரூ. 25 லட்சம்
அனுபமா பரமேஸ்வரன்- ரூ. 1 லட்சம்
மோகன்லால்- ரூ. 25 லட்சம்
கமல்ஹாசன்- ரூ. 25 லட்சம்
சூர்யா, கார்த்தி- ரூ. 25 லட்சம்
விஷால்- ரூ. 10 லட்சம்

மேலும் செய்திகள்