எங்களுக்கு பணம் வேண்டாம், உணவு மட்டும் கொடுங்கள் - வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள்

எங்களுக்கு பணம் வேண்டாம், உணவு மட்டும் கொடுங்கள் என வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். #KeralaFloods

Update: 2018-08-17 10:40 GMT

கேரளாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2,23,000 பேர் 1568 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தத்தளித்து வருகிறார்கள், அவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். வெள்ளத்தினால் மக்கள் அனைத்தையும் இழந்து, முகாம்களில் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவியை மாநில அரசு செய்து வருகிறது. உதவிகளை வழங்குமாறும் கேரள அரசு கோரிக்கையை விடுத்துள்ளது, மக்கள் உதவியை வழங்கி வருகிறார்கள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அலுவாவில் உள்ள மக்கள் தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்குமாறு கோரிக்கையை விடுத்துள்ளார்கள்.

எங்களுக்கு உணவும், தங்கிமிடுமும் கொடுங்கள் என்று அதிகாரிகளிடம் கோரிக்கையை விடுத்துள்ளனர். “எங்களுக்கு பணம் வேண்டாம், எங்களுக்கு உணவு போதும். கடந்த 72 மணி நேரங்களாக மக்களுக்கு சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை,” என்று உள்ளூரை சேர்ந்த சராவுதீன் வேதனையுடன் கூறியுள்ளார். வெள்ளம், நிலச்சரிவு காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது.

மேலும் செய்திகள்