வாக்காளர் பட்டியலில் பெண்ணின் புகைப்படத்துக்கு பதில் சன்னி லியோன் புகைப்படம்

உத்தர பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் ஒரு பெண்ணின் புகைப்படத்துக்கு பதில், சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-08-25 09:06 GMT
வாரனாசி

உத்தரபிரதேச மாநிலத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 2 பக்கங்கள் வெளியாகியுள்ளன. அதில் 51 வயது  துர்காவதி என்ற பெண்ணின் புகைப்படத்துக்கு பதில் சன்னி லியோனின் படமும், 56 வயது ஆணின் படத்துக்கு பதில் யானை படமும் இடம்பெற்றுள்ளன. இதேபோல் மான், புறா ஆகியவற்றின் புகைப்படங்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்