தேசிய செய்திகள்
அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் 45 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் 45 பயணிகளுடன் சென்ற படகு விபத்திற்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கவுகாத்தி,

அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் கவுகாத்தில் இருந்து மத்திய கந்தாவிற்கு 45 பயணிகளுடன் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக தகவல்கள் வெளியானது.

 இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் மற்றும் அசாம் போலீசார் படகு விபத்து நடத்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

விபத்திற்குள்ளான படகில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தாக கூறப்படுகிறது.  இந்தியாவின் மிகப் பெரிய ஆறானா பிரம்மபுத்திரா, அசாம், மேகாலயா வழியாக வங்கதேசத்துக்குச் செல்கிறது.