தேசிய செய்திகள்
என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்யத்தயார்- அமைச்சர் வேலுமணி

என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத்தயார்; அரசியலை விட்டும் விலகத் தயார் என அமைச்சர் வேலுமணி கூறினார்.
புதுடெல்லி

டெல்லியில் நடைபெற்ற விழாவில்  தமிழ்நாட்டில் 2017-18ம் நிதியாண்டில் 100 வேலைவாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு தேசிய விருது வழங்கபட்டது. மத்திய அரசின்  தேசிய விருதுகளை  ஊரக வளர்சித்துறை அமைச்சர் வேலுமணி பெற்றுக்கொண்டார்.

பின்னர் டெல்லியில் அமைச்சர் வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசு 6 விருதுகளை தமிழகத்துக்கு தந்துள்ளது.

தமிழக அரசை கவிழ்க்க திமுக எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து வருகின்றன. முதல்வர், துணை முதல்வரை தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவரின் மீதும் திமுக குற்றஞ்சாட்டி வருகிறது.


அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்படுகிறது.  அதிமுக அரசை கலைக்க வேண்டும், கட்சியை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான கருத்துக்களை எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.  

உள்ளாட்சி துறை விதியை மீறி எந்த டெண்டரும் வழங்கப்படவில்லை என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத்தயார்; அரசியலை விட்டும் விலகத் தயார். நிருபிக்காவிட்டால் மு.க ஸ்டாலின் தி.மு.க தலைவர் பதவியில் இருந்து விலகுவாரா என கூறினார்.