சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக அக்டோபர் 3ந்தேதி ரஞ்சன் கோகாய் பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக அக்டோபர் 3ந்தேதி ரஞ்சன் கோகாய் பதவியேற்கிறார்.

Update: 2018-09-13 15:09 GMT

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவி வகித்து வருகிறார்.  இவரது பதவி காலம் வருகிற அக்டோபர் 2ந்தேதியுடன் முடிவடைகிறது.

இதனை அடுத்து அவர் அன்று ஓய்வு பெறுகிறார்.  இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஆணை பிறப்பித்துள்ளார்.

அதன்படி அக்டோபர் 3ந்தேதி கோகாய் பதவியேற்கிறார்.  அவர் சுப்ரீம் கோர்ட்டின் 46வது தலைமை நீதிபதியாவார்.  இத்தகவலை சட்ட அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிபிப்லி தெரிவிக்கப்பட்டு உள்ளது.  அவரது பதவி காலம் வருகிற 2019ம் ஆண்டு நவம்பரில் முடிவடைகிறது.

மேலும் செய்திகள்