ஐதராபாத்: நாட்டிலேயே முதல் முறையாக நாய்களுக்கான பூங்கா விரைவில் திறக்கப்படுகிறது

நாட்டிலேயே முதல் முறையாக நாய்களுக்கான பூங்கா ஐதராபாத்தில் விரைவில் திறக்கப்படுகிறது.

Update: 2018-09-16 21:45 GMT
ஐதராபாத்,

பூங்காக்களில் நாய்களை அனுமதிப்பது இல்லை என்ற நாய் உரிமையாளர்களின் மனக்குறையை கருத்திற்கொண்டு, நாட்டிலேயே முதல் முறையாக ஐதராபாத்தில் கொண்டபூர் என்ற இடத்தில் நாய்களுக்கான பிரத்யேக பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இது, 10 நாட்களில் திறக்கப்படுகிறது. குப்பை கிடங்குக்காக ஒதுக்கப்பட்ட 1.3 ஏக்கர் நிலத்தில் இப்பூங்காவை பெருநகர ஐதராபாத் மாநகராட்சி உருவாக்கி உள்ளது. ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில், ஒராண்டாக பாடுபட்டு இதை அமைத்துள்ளனர்.

இந்த பூங்காவில், நாய்களுக்கான நடைபகுதி, ஆஸ்பத்திரி, நீரூற்று, புல்வெளி, நாய்களுக்கான பயிற்சி சாதனங்கள், கழிவறை, சிறிய, பெரிய நாய்களுக்காக தனித்தனி பகுதிகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், கால்நடை மருத்துவர், நாய் பயிற்சியாளர் ஆகியோரும் இருப்பார்கள். நாய்களுக்கு இலவச தடுப்பூசியும் போடப்படும். நாய் உரிமையாளர்கள், தங்கள் நாய்களை இந்த பூங்காவுக்கு அழைத்து வந்து உற்சாகப்படுத்தலாம் என்று மாநகராட்சி கூறியுள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மேலும் ஒரு நாய் பூங்கா உருவாக்க திட்டமிட்டுள்ளது.



மேலும் செய்திகள்