திருப்பதி ஏழுமலையான் கோவில்: சாதாரண பக்தர் போல் சென்று சாமி தரிசனம் செய்த துணை ஜனாதிபதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், துணை ஜனாதிபதி சாதாரண பக்தர் போல் சென்று சாமி தரிசனம் செய்தார்.

Update: 2018-09-25 22:15 GMT
திருமலை,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்தினருடன் நேற்று திருமலைக்கு வந்தார். அங்கு அவருக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உயரிய ‘இஸ்தி கப்பல்’ வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வெங்கையா நாயுடு மற்றும் அவருடைய குடும்பத்தினர் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக சாதாரண பக்தர்கள் போல் சென்று மூலவர் வெங்கடாசலபதியை வழிபட்டனர்.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஏழுமலையான் கோவிலில் மகாதுவாரம் நுழைவு வாயில் வழியாக நேரடியாக சென்று சாமி தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி வெங்கையா நாயுடு கூறுகையில், “கோவிலின் மகாதுவாரம் வழியாக சென்று சாமி தரிசனம் செய்வதற்கு எனக்கு உரிமை உள்ளது. ஆனாலும் திருமலையில் சாதாரண பக்தர்களைப் போல வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக அனைவருடனும் நடந்து கோவிலுக்குள் சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.


மேலும் செய்திகள்