போதை பொருளுக்கு எதிராக பாடல் எழுதிய பஞ்சாபி பாடகர் ஹெராயின் கடத்தல் வழக்கில் கைது

போதை பொருளுக்கு எதிராக பாடல் எழுதிய பஞ்சாபி பாடகர் ஹெராயின் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-09-30 11:07 GMT

சண்டிகார்,

பஞ்சாபின் மன்சா மாவட்டத்தினை சேர்ந்த பிரபல பாடகர் ஹர்மான் சித்து.  இவர் ஹெராயின் என்ற போதை பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீங்குகள் பற்றி பாடல் ஒன்றை கடந்த 2015ம் ஆண்டு எழுதினார்.  அது மக்களிடையே பிரபலம் அடைந்தது.

இந்த நிலையில் அரியானாவில் சிர்சா நகரில் பவ்தீன் கிராமத்தில் சுங்க சாவடி ஒன்றில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.  அந்த வழியே போதை பொருள் கடத்தப்படுகிறது என கிடைத்த தகவலை அடுத்து கார் ஒன்றை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.

அதில் ஓட்டுநருக்கு அருகே போதை பொருள் அடங்கிய கட்டுகள் இருந்துள்ளன.  அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பாடகர் சித்து தலைமையில் 4 பேர் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது.

அவர்கள் ராம்நிக் சிங் (வருவாய் துறை அதிகாரி), சுர்ஜித் சிங், மனோஜ் மற்றும் அனுராக் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து ரூ.5.2 லட்சம் மதிப்புள்ள 52.1 கிராம் எடை கொண்ட ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்