ஓடிய ரெயிலில் தவறி விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் வீடியோ

மும்பையில் ஓடிக்கொண்டிருந்த ரெயிலில் தொங்கியபடி பயணித்த இளம்பெண், தவறி விழும் வீடியோ காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-10-03 10:39 GMT
சமீபத்தில் சமூக வலைதளங்களில்  வைரலாகி உள்ள வீடியோ ஒன்றில்  இளம் பெண் ஒருவர், கையை காற்றில் உலவ விடுவது போன்றோ, கையில் இருந்து பறந்த பொருளைப் பிடிப்பது போன்றோ, ஓடும் ரெயிலில் இருந்து தொங்குகிறார். அப்போது, எதிர்திசையில் இருந்து வந்த ரெயில் அவரது கையில் பட்டதால், பிடி நழுவி கீழே விழுகிறார்.

உடனடியாக சுதாரித்த சக பயணிகள், ரயிலின் படிக்கட்டைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை காப்பாற்றி மேலே தூக்கி விடுகிறார். மும்பையில், இளம்பெண்களும் ஓடும் ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்து, ஆபத்தான சாகசங்களை மேற்கொள்ளும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகள்