ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்தது; 13 வீரர்கள் காயம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தெற்கே ராணுவ வாகனம் ஒன்று கவிழ்ந்ததில் 13 வீரர்கள் காயமடைந்து உள்ளனர்.

Update: 2018-10-06 09:03 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் தெற்கே சோபியான் மாவட்டத்தில் கனிபோரா பகுதியருகே ராணுவ வாகனம் ஒன்று இன்று காலை புறப்பட்டு சென்றது.  அது திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த ராணுவ வீரர்களில் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவ மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.  அவர்களது உடல்நிலை சிகிச்சைக்கு பின் சீரடைந்து உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்