மல்லையா, நிரவ் மோடியுடன் நட்பு; எங்களுக்கு எதிராக ஐடி ரெய்டா? மத்திய அரசு மீது அரவிந்த் கெஜ்ரிவால் பாய்ச்சல்

டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெல்லாட்டிற்கு சொந்தமான 15 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-10 13:10 GMT

போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெல்லாட்டின் உறவினர்கள் நடத்தும் நிறுவனத்தில் வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கில் ரெய்டு நடைபெறுகிறது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரெய்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. இப்போது வருமானவரி சோதனையை நடத்துவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார் 

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “மல்லையா, நிரவ் மோடியுடன் நட்பு, ஆனால் எங்களுக்கு ஐடி ரெய்டா? மோடிஜி நீங்கள் எனக்கு, சத்யேந்தருக்கு மற்றும் மனிஷுக்கு எதிராக ஐடி ரெய்டை நடத்தினீர்கள். ஆனால், அவை என்ன ஆனது? உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இனி அடுத்த சோதனைக்கு செல்லும் முன் டெல்லி அரசுக்கு தொல்லை கொடுப்பதற்கு குறைந்தபட்சம் அரசை தேர்வு செய்த டெல்லி மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்,'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்