5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை

5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2018-10-12 22:00 GMT
புதுடெல்லி,

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல்களை எவ்வித முறைகேடும் இன்றி நேர்மையாக நடத்துவதை உறுதிசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்த வேண்டும் எனக்கோரி காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரசார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், மத்திய பிரதேசத்தில் சுமார் 68 லட்சம் போலி வாக்காளர் இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் மாநில வாக்காளர் பட்டியலை மாற்றி வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கில் தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வக்கீல் விகாஸ் சிங், மத்திய பிரதேச வாக்காளர் பட்டியல் தொடர்பாக போலி ஆதாரங்கள் அடிப்படையில் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனுவை விசாரிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும் செய்திகள்